அரசுப் பள்ளியில் ஆசிரியர் நடத்திய அட்ராசிட்டி! குடிபோதையால் நடந்த கூத்து

குடிபோதையில் பூவந்தி ஆசிரியர் ரஜினிகாந்த்

குடிபோதையில் பள்ளியின் வகுப்பறையில் மயங்கிய ஆசிரியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த ஆசிரியர், மாவட்ட ஆட்சியர் லதா உத்தரவின் பேரில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மேலப்பூவந்தி அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 220 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். 13 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஓராண்டுகாலமாக இப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் இல்லாததால் நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் சிவகுருநாதன் என்கிற ஆசிரியர் தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்து வருகிறார். இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் ரஜினிகாந்த்,  தொடர்ந்து பள்ளி நேரத்தில் மதிய வேளையில் மதுரை எல்லையான நாட்டார்மங்கலத்துக்குச் சென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்து மட்டையாவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனால், பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள். நேற்று மாலை ஆசிரியர் ரஜினிகாந்த் குடிபோதையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் நிலைதடுமாறிப்போய் சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.

பூவந்தி பள்ளி ஆசிரியர் ரஜினிகாந்த்

உள்ளுர் பிரமுகரான மணிகண்டனுக்குப் பள்ளியில் இருந்து தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே பள்ளிக்கு வந்த மணிகண்டன் ஆசிரியர் ரஜினிகாந்த் நிலைமையை செல்போனில் படமெடுத்து மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் அனுப்பியிருக்கிறார். கலெக்டர் உத்தரவிட்டதால் உடனே பள்ளிக்கு விரைந்து வந்தார் கல்வி அதிகாரி அகிலா. அவரிடம், உதவி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினிகாந்த் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு, மாவட்டக் கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயராஜ் உத்தரவின் பேரில் ஆசிரியர் ரஜினிகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!