தமிழகத்தில் ஐந்து இடங்களில் இலவச ‘அம்மா வைஃபை மண்டலம்’! # AmmaWifiZone | TN Government Introduced Free Amma Wifi Zone

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (07/04/2018)

கடைசி தொடர்பு:13:23 (07/04/2018)

தமிழகத்தில் ஐந்து இடங்களில் இலவச ‘அம்மா வைஃபை மண்டலம்’! # AmmaWifiZone

தமிழகம் முழுவதும் 5 இடங்களில் இலவச வசதியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இலவச வைஃபை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்
ஆகியவற்றில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும் என அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 50 இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதைச் செயல்படுத்தும் வகையில் தற்போதுள்ள தமிழக அரசு இதற்கான அரசாணையைக் கடந்த ஆண்டு வெளியிட்டது. தமிழக அரசின் கேபிள் நிறுவனம் சார்பில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில் வைஃபை மண்டலங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் மெரினா உழைப்பாளர்கள் சிலை, மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், திருச்சி, சேலம் மத்தியப்பேருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் `அம்மா இலவச வைஃபை மண்டலம்’ தொடங்கப்பட்டது. இதை நேற்று முதல்வர் எடப்படி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த வைஃபையை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வரை இலவசமாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 ரூபாய் வசூல் செய்யப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


[X] Close

[X] Close