காவிரிக்காகப் பழங்குடி இன மக்கள் வேடமிட்டு காட்டுக்குள் குடியேறும் போராட்டம்! #WeWantCMB

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்தக் கோரி தமிழக மக்கள் எழுச்சிக் கழகத்தினர் காட்டுக்குள் குடியேறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்தக் கோரி தமிழக மக்கள் எழுச்சிக் கழகத்தினர் காட்டுக்குள் குடியேறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

காவிரி மேலாண்மை வாரியம் கோரி காட்டிற்குள் குடியேறும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 10 நாள்களாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க கூட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான தி.மு.க தலைமையில் ஒருங்கிணைந்துள்ள காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், ம.ம.க, திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள், விவசாயச் சங்கத்தினர், மாணவர், இளைஞர் அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை மூட வலியுறுத்தியும் தமிழக மக்கள் எழுச்சிக் கழகத்தின் சார்பில் காட்டுக்குள் குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். அக்கட்சியின் நிர்வாகி ராஜேந்திரன் தலைமையில் திருப்புல்லாணி பகுதியில் திரண்ட கட்சித் தொண்டர்கள் பழங்குயின மக்கள் போல் வேடமிட்டு தங்கள் குடும்பத்தினர், குழந்தைகள், கால்நடைகள் ஆகியவற்றுடன் புல்லாணி அம்மன் கோயில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் குடியேறினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் எழுச்சிக் கழகத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி பாத்திரங்கள் மற்றும் படுக்கைகளுடன் காட்டுக்குள் குடியேறியுள்ள நிலையில் அவர்களைச் சமாதானப் படுத்துவதற்காக போலீஸார் அங்கு சென்றுள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!