வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (07/04/2018)

கடைசி தொடர்பு:14:44 (07/04/2018)

அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு தடுப்பூசி தயார்! இயக்குநர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, 262 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாய்க்கடிக்கு தடுப்பூசி இல்லாமல் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த 18-ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அது தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தயாளனிடம் கேட்டிருந்தோம் அவர், விரைவில் மருந்து வந்துவிடும் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில், 'திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 262 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாய்க்கடிக்கு, தேவை அதிகம் உள்ள மருத்துவ மனைகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் இனி தங்கு தடையின்றி தடுப்பூசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தயாளன் தெரிவித்தார். மேலும், `இனி நாய்க்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பாடாது’ என்றும் தெரிவித்தார்.