வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (07/04/2018)

கடைசி தொடர்பு:15:15 (07/04/2018)

தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு!

தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு!

காமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வென்ற, வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்துக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 

சதீஷ்குமார் சிவலிங்கம்

21-வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள இதில், இந்தியா அசத்தி வருகிறது. இதுவரை 4 பதக்கங்கள் பெற்றிருந்த நிலையில், இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். ஏற்கெனவே, இவர் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த்தில் தங்கம் வென்ற நிலையில் இன்று இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். 

சாதனை படைத்த சதீஷ்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் சச்சின், சேவாக், இதேபோல் ஸ்டாலின், ஓ.பி.எஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சதீஷுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமாருக்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும், முதல்வர் பழனிசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில்,  ``தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இதேபோல் பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க