வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (07/04/2018)

கடைசி தொடர்பு:15:37 (07/04/2018)

`அப்போலோவில் காவிரி குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்' - ராமமோகன ராவ்!

`அப்போலோவில் காவிரி குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்' - ராமமோகன ராவ்!

அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது காவிரி வழக்கு குறித்து ஜெயலலிதா ஆலோசனை அளித்தார் என முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார். 

ராமமோகன ராவ்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இதில், தற்போது சசிகலா தரப்பினரின் குறுக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளித்தேன். 

மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன். செப்டம்பர் 27-ம் தேதி காவிரி விவகாரம் குறித்து மருத்துவமனையிலேயே 2 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். நீதிமன்றத்தில் எவ்வாறு வாதாடுவது, எப்படி மத்திய அரசை வலியுறுத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அதன்பிறகு நவம்பர், டிசம்பர் மாதத்திலும் அவரை மருத்துவமனையில் பார்த்தேன். ஜெயலலிதா தமிழ்நாட்டுக்காவே வாழ்ந்தார். அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்கு ஆணையத்தில் பதிலளிக்கவில்லை" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க