போட்டித்தேர்வு எழுதும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தைக் குறைத்த பீகார் அரசு!

பெண்கள் அதிகளவில் போட்டித்தேர்வுகளில் பங்குபெற வைக்க விண்ணப்பக்கட்டணம் பல மடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது

போட்டித்தேர்வு

போட்டுத்தேர்வில் அதிகளவில் பெண்கள் பங்குபெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது பீகார் அரசு. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. போட்டித்தேர்வுகளுக்கு மட்டுமல்லாது, பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பீகார் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கும் இந்தக் கட்டணம் குறைப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி போட்டித்தேர்வு எழுதும் பெண்கள் முதல்நிலை தேர்வுக்கட்டணமாக 600 ரூபாய் செலுத்துவதற்குப் பதிலாக 150 ரூபாயும், முதன்மையான தேர்வுக்கான கட்டணமாக 750 ரூபாய் செலுத்துவதற்குப் பதிலாக 200 ரூபாய் செலுத்தினால் போதுமானது. மேலும்,  அரசு நிர்வாகப் பணியிடங்களுக்கான எண்ணிக்கையையும் உயர்த்த அனுமதி வழங்கி இருக்கிறது பீகார் அமைச்சரவை. தற்போது 1,150 நிர்வாகப் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதனை 1,634 இடங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், துணை ஆட்சியர், மூத்த துணை ஆட்சியர், உதவிச் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், சிறப்புச் செயலாளர் என ஏகப்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  

பீகார் அரசு, அரசுப் பணிகளுக்குப் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!