வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (07/04/2018)

கடைசி தொடர்பு:16:33 (07/04/2018)

பிரதமருக்கு 2,000 கடிதங்கள் அனுப்பிய தமிழக பள்ளி மாணவர்கள்!

மோடிக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி மாணவர்கள்  பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று  கடிதம் அனுப்பியுள்ளனர்.  

மோடிக்கு கடிதம்

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் இளைஞர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்திவந்த நிலையில்.  திருவாரூர் மாவட்டம் காவிரி டெல்டாவின் பிரதான மாவட்டம் என்பதால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக சாலைமறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர், 

அக்கடிதத்தில்  பிரதமர் அவர்களே, காவிரி  மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில்  20 மாணவர்கள் மட்டும்  நீடாமங்கலம் வட்டாட்சியர்  அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.