வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (07/04/2018)

கடைசி தொடர்பு:18:08 (07/04/2018)

`ஐ.பி.எல் பார்க்காதீர்கள்!’ - தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜெயக்குமார் வேண்டுகோள் #IPL

காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐபிஎல் குறித்து ஜெயக்குமார்
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது.  ஐ.பி.எல் போட்டியைத் தமிழக ரசிகர்கள் புறக்கணித்தால் தேசியளவில் கவனத்தை ஈர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தலாம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுகின்றன. 

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `காவிரி வாரியத்துக்காகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க வேண்டாம்; சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று பேசினார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,  `பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எனவே, தமிழக அரசு மூன்று பேரை பரிந்துரை செய்திருந்தது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் முடிவில் மாநில அரசு தலையிட முடியாது’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க