`நமக்காகவும் சேர்த்துதான் போராடுறாங்க... டிஸ்டர்ப் பண்ணாதீங்க!’ - நெகிழவைத்த போலீஸ்

காவிரி உரிமை மிட்புக்குழுவினர் தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவத்தின் போது காவல்துறையினர் சிலர் உணர்வுடன் பேசியது பொதுமக்களை நெகிழ வைத்தது. காவிரி உரிமை மிட்புக்குழுவினர் தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவத்தின் போது காவல்துறையினர் சிலர் உணர்வுடன் பேசியது பொதுமக்களை நெகிழ வைத்தது. காவிரி உரிமை மிட்புக்குழுவினர் தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவத்தின் போது காவல்துறையினர் சிலர் உணர்வுடன் பேசியது பொதுமக்களை நெகிழ வைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு இன்று போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தின்போது காவல்துறையினர் சிலர் உணர்வுடன் பேசியது பொதுமக்களை நெகிழ வைத்தது.

காவிரி போராட்டம்

ஏப்ரல் 7-ம் தேதி, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். இதனால் இன்று காலையிலிருந்தே தஞ்சாவூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம், கலால் வரி அலுவலகம், தபால் நிலையங்கள், காந்திஜி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருப்பதால், இந்தப் போராட்டங்களைத் தடுத்துவிட வேண்டும் என்பதில் போலீஸார் விழிப்புடன் இருந்தார்கள்.   

ஆனால், இவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் வ.உ.சி நகரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, இன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் குவிந்தார்கள். அப்போதுதான் அலுவலகம் திறக்கப்பட்டு ஊழியர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இதன் பிரதான வாயிற்கதவுகளை இழுத்து மூடி, புதிதாக வாங்கி வந்திருந்த பெரிய பித்தளைப் பூட்டை போட்டுப் பூட்டி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்கள். இதனால் பரபரப்பான சூழல் உருவானது. தகவல் அறிந்து காவல்துறையினர் இங்கு விரைந்தார்கள்.

போராட்டக்காரர்களை உடனடியாகக் கைது செய்ய முயன்றார்கள். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. நீண்டநேரம் இங்கேயே இருந்து முழக்கமிட்ட பிறகே கைதாவோம் எனத் தெரிவித்தார்கள். அப்போது காவல்துறையினர் தங்களுக்குள் பேசிக்கொண்டவாறு ‘நமக்காகவும் சேர்த்துதான் இவங்க போராடுறாங்க. காவிரி தண்ணீர் வரலைனா, நாம குடிக்ககூட தண்ணீர் இல்லாம போயிடும். இவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’ எனச் சொன்னது சுற்றியிருந்த பொதுமக்களை நெகிழ வைத்தது. பூட்டை திறக்கணும் சாவியைக் கொடுங்க எனப் போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் சிலர் கறாராகக் கேட்டதற்கு ‘நாங்க சாவி தரமாட்டோம். நீங்களே பூட்டை உடைச்சிக்குங்க என மறுத்துவிட்டார்கள்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!