`மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசு!’ - ஆற்றில் இறங்கிப் போராடிய மாணவர்கள் கொந்தளிப்பு

`மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசு!’ - ஆற்றில் இறங்கிப் போராடிய மாணவர்கள் கொந்தளிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும்  பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காவிரி விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரில் மாணவர்கள், இளைஞர்கள் ஓடம் போக்கி ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், ஆற்றில் இறங்கிப் போராடியவர்களையும் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கர்நாடகத்தில் காவிரிக்காக போராடுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு செயல்படுகிறது. போராட்டங்களை  அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், தமிழகத்தில் காவிரி உரிமைக்காக போராடுபவர்கள் மீது வழக்கு போடுவதும் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதுமான நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத வகையில் அரசு செயல்படுவதாகவும்  குற்றம்சாட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!