வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (08/04/2018)

கடைசி தொடர்பு:02:40 (08/04/2018)

காவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் - காவிரி நடைபயணம்

மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பில் தொடங்கிய காவிரி மீட்புக் குழு பயணம், முதல் நாளன்று கல்லணை பகுதியில் நிறைவடைந்தது. முதல் பயணத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், "காவிரிப் பிரச்னையை ஏதோ டெல்டா பகுதி மக்களின் பிரச்னையாகவே பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால், டெல்டா மாவட்டங்களை விடவும் பல மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையும் இதில் அடங்கியிருக்கிறது. ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காவிரி தண்ணீர்தான் குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தாமதப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணித்த வஞ்சித்து விட்டது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க