தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் புதிய திருப்பம்; விபிஎஃப் கட்டணம் குறைப்பு #TamilCinemaStrike

வி.பி.எஃப் கட்டணத்தில் ஐம்பது சதவீதம் அளவுக்குக் குறைத்து தமிழகத்தின் மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம்

கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நடப்பு போராட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்களை கையில் வைத்திருக்கக்கூடிய கியூப் நிறுவனம் 18- 23% வரை வி,பி.எஃப் கட்டணத்தில் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மேலும் தள்ளுபடி வேண்டும் என்ற சூழ்நிலையில் போராட்டம் வேலை நிறுத்தமாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் 50% க்கும் குறைந்தளவில் வி.பி.எஃப் ஆக வசூலித்துக்கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் - ஏரோக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

சர்வதேச அளவில் ஹாலிவுட் ஸ்டூடியோக்களால் பரிந்துரைக்கப்படும்  உயரிய தொழில்நுட்பமான டி.சி.ஐ அந்தஸ்து (DCI approval) பெற்றது ஏரோக்ஸ் நிறுவனம். 2015ஆம் வருடம் முதல் தமிழ் நாடு திரையரங்குகளுக்கு டிஜிட்டல் சினிமா சர்வீசைக் கொடுத்துவரும் இந்நிறுவனம் தமிழகத்தில் கியூப் , யு,எஃப்.ஓ அல்லாத சில திரையரங்குகளை தன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!