சத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்..! - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates

சத்யராஜ் ஆவேசம்...

*`விவசாயமும் விவசாயிகளும் நன்றாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் நகல் ஆளுநரிடம் வழங்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி’  என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

*இதனிடையே, சத்யராஜ் பேச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டதால் போராட்டக் களம் பரபரப்பானது. அவர்களின் முழக்கத்திற்கு இணங்க சத்யராஜ் பேசைனார். 'காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், குரல்கொடுக்க தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்"  என்று ஆவேசமாக முழக்கமிட்டார். 

*போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறிய பெஃப்சி தலைவர் செல்வமணி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்தும் ஒட்டுமொத்த திரைத்துறை சார்பில் மத்திய மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

போராட்டத்தில் கலந்துகொள்ளாத முக்கிய நடிகர்கள்...

*இந்நிலையில் நடிகர் சங்கம் நடத்திய இந்த போராட்டத்தில் நடிகர்கள் அஜித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி, விஷ்ணு விஷால், அர்ஜுன், ஆர்யா, சந்தானம், வடிவேல், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராதாரவி, அதர்வா, பரத், விக்ரம் பிரபு, பிரபு தேவா, ஜீவா, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. 

ஒரே மேடையில் இளையராஜா, வைரமுத்து...

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

*ரஜினிகாந்த் போராட்டக் களத்திற்கு வந்தடைந்தார். கமல்ஹாசனுக்கு கைக்கொடுத்து அவர் அருகில் அமர்ந்துகொண்டார். அறவழிப் போராட்டம் குறித்தும் தமிழகத்தின் இன்றைய சூழல் குறித்தும் இருவரும் பேசி வருகின்றனர். நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் விஷால் ரஜினிகாந்தை போராட்டக் களத்துக்கு வரவேற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இருபத்தைந்து வருடங்களுக்குக்கு பிறகு இளையராஜாவும் வைரமுத்துவும் ஒரே ஃப்ரேமில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

*இசையமைப்பாளர் இளையராஜா போராட்டக் களத்திற்கு வருகை தந்துள்ளார். வைரமுத்தும் இளையராஜாவும் 25 வருடங்களுக்கு பிறகு ஒருவருக்கொருவர் நேருக்குநேர் பார்த்துக்கொண்டனர். 

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

*நடிகர் கமல்ஹாசன் அறவழிப் போராட்டத்திற்கு தன் வருகையை தந்துள்ளார். 

*முன்னர் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியபோது, அவருக்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல் கொடுக்கவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார் வைரமுத்து. இந்நிலையில், இன்றைய போராட்டக் களத்தில் இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு போராட்டம் குறித்துப் பேசிவருகின்றனர். 

*நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் போராட்டக் களத்திற்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

*விக்ரம், விஜய் சேதுபதி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

*நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் 11 மணியளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

சத்யராஜ், சூர்யா, தனுஷ் பங்கேற்பு :
போராட்டக் களத்திற்கு சத்யராஜ், சூர்யா, தனுஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். தனுஷ் போராட்டக் களத்திற்கு வந்தவுடன் விஜய்க்கு கைக்கொடுக்க வந்தார். அப்போது அருகில் இருந்த சிவகார்த்திகேயன் எழுந்து நிற்க, சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்த தனுஷ், அவரை அணைத்துக்கொண்டார். முன்னர் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று திரைத்துறையில் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

மேடையில் விஜய் - விஷால் நெகிழ்ச்சி :

விஜய்க்கும் விஷாலுக்கும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்து வந்ததாக தமிழ் திரையுலக வட்டாரத்தில் தகவல் கசிந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசை வலியுறுத்தி நடந்து வரும் மௌன அறவழிப் போராட்டத்தில் விஷாலுக்கு முன்பே விஜய் போராட்டக் களத்துக்கு வந்தார். விஷால் வந்தவுடன் விஜய் எழுந்து இருவரும் அணைத்துக் கொண்டனர். விஜய் அருகில் விஷால் அமர வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் எழுந்து விஷாலுக்கு இடங்கொடுத்தார். இருவரும் அருகில் அமர்ந்து போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 

நடிகர் சங்கம்

நாசர் பேச்சு... 

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம். 

 

நடிகர் சங்கம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.  

இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில், தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அரசியலில் முழு வீச்சில் செயல்பட்டுவரும் கமல், ரஜினி இன்றைய அறவழி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

நடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் சிவக்குமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.  நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே போராட்டக்களத்துக்கு வந்தடைந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!