வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (08/04/2018)

கடைசி தொடர்பு:11:45 (08/04/2018)

”விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?” - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர்

”விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?” என்று சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தோனி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு தொடர் போராட்டங்களை அனைத்துக் கட்சியினரும் முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான வையாபுரி மணிகண்டன் தலைமையிலான இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அதிமுக கட்சிக்கொடியுடன் திரண்டனர்.

தோனி

அப்போது, ஐபிஎல் போட்டியைச் சென்னையில் நடத்தக்கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், வாரியம் அமைத்த பின்னரே சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். மேலும், ”விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?” என்று கேட்டு கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க