`கறுப்பு பேட்ஜ்!’ - சிஎஸ்கே வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரஜினி அட்வைஸ் #IPL #WeWantCMB

ரஜினிகாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டம் நடத்தி வருகிறது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலத்தை வீணடித்து வருகிறது. அனைத்துத் தமிழக மக்களின் கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான். அதனை விரைவில் அமைக்காவிட்டால் அனைத்துத் தமிழர்களின் கோவத்துக்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும்’ என்றார்.

ஐபிஎல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி  `மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமான சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம். எனவே தமிழக மக்களின் போராட்டம் தேசியளவில் கவனத்தை ஈர்க்கும். இதற்கு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படியில்லையெனில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போகும் தமிழக ரசிகர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு மைதானத்துக்குச் செல்லலாம். இந்தப் சூழலில் சென்னையில் ஐபிஎல் நடக்கவில்லை என்றால் நல்லதுதான்’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!