`ஆறோடு சேர்ந்து வயலும் காய்ஞ்சு கிடக்கே..!’ - காவிரி் நடைபயணத்தில் வருந்திய ஸ்டாலின் | Mega rally of stalin for cauvery

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (08/04/2018)

கடைசி தொடர்பு:12:55 (08/04/2018)

`ஆறோடு சேர்ந்து வயலும் காய்ஞ்சு கிடக்கே..!’ - காவிரி் நடைபயணத்தில் வருந்திய ஸ்டாலின்

காவிரி உரிமை மீட்பு இரண்டாம் நாள் பயணத்தில் காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை செல்ல தயார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின்

காவிரி உரிமை மீட்பு இரண்டாம் நாள்  நடைபயணத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் சூரக்கோட்டையில் ஆரம்பித்தார். 

அவருடன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வந்தனர். சரியாகக் காலை 8.30 மணிக்கு ஸ்டாலின் சூரக்கோட்டைக்கு வந்தார். அவருக்குப் பறை அடித்தும், அறுவடை செய்யப்பட்ட வயலில் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சாலை ஓரத்தில் ஸ்டாலின் பேசுவதற்காக சிறிய அளவில் மேடை அமைத்திருந்தனர்.

ஆனால் அவர் மேடையில் ஏறிப் பேசாமல் வந்த உடனேயே நடக்க ஆரம்பித்தார். ஒரு கிலோ மீட்டர் வரை நடந்த ஸ்டாலின் பின்னர் பிரச்சார வேனில் ஏறிக்கொண்டார். அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன் ஆகியோரும் ஏறிக்கொண்டனர். வேனில் இருந்தபடியே மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலினுக்கு தேவையானதைச் செய்து கொடுத்தார். பல இடங்களில் பெண்கள் கூடி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஸ்டாலின்

ஊருக்குள் செல்லும் போது சாலையில் நடந்தபடியே சென்ற ஸ்டாலின் ஊரைத் தாண்டியதும் வேனில் ஏறிக்கொண்டார். பின்னர் அடுத்த ஊர் வரும்போது மீண்டும் இறங்கி நடக்க ஆரம்பித்தார். காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் கல்லணை கால்வாயின் கிளை ஆறு செல்லும் வழியிலேயே  நடைபயணத்தையும் மேற்கொண்டார் ஸ்டாலின்.

சூரக்கோட்டையில் தொடங்கிய பயணம் கா.புதூர்.கோவிலூர், ஈச்சங்கோட்டை, தெக்கூர், எனச் சென்றவர் இடையில் இறங்கி வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றைப் பல இடங்களில் பார்த்தார். அப்போது மிகவும் மனம் வருத்தப்பட்டு `தண்ணீர் வந்தா இந்த ஏரியாவே ரொம்ப ரம்மியமா இருக்கும். இப்படி ஆறோடு சேர்ந்து வயலும் காய்ஞ்சு கிடக்கே' எனக் குறிப்பிட்டுக்கிறார்.

பின்னர் சில்லத்தூரில் வயலில் அமைக்கப்பட்ட மேடையில் பேசினார். இங்கு ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் கூடி இருக்கிறீர்கள். இதுவே தமிழகத்தின் மாற்றத்திற்கான வழியைக் காட்டுகிறது. காவிரிக்காகப் போராடும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதைப் பற்றி கவலை இல்லை காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன். 

ஸ்டாலின்

காவிரிக்காகப் போராடும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதைப் பற்றி கவலை இல்லை காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்.

காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி எள்ளவிற்கு கூடத் தமிழகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை. அவர் வரும் 12ம் தேதி சென்னை வர இருப்பதாகச் சொல்கிறார்கள். மோடி சாலை மார்க்கமாக வந்தாலும், ஹெலிகாப்டர் மூலம் வந்தாலும் கறுப்பு கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

அன்று மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், கறுப்பு உடை அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’ எனப் பேசிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க