வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (08/04/2018)

`நானும் ஒரு விவசாயிதான்!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரி என்பது கிட்டத்தட்ட நூறாண்டு பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், இருக்கிற பிரச்சனைகளை பேசித்தான் தீர்க்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

காவிரி என்பது கிட்டத்தட்ட நூறாண்டு பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், இருக்கிற பிரச்சனைகளை பேசித்தான் தீர்க்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

பொன். ராதாகிருஷ்ணன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ``தமிழக மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளின் பிரச்னை எனக்கு நன்கு தெரியும். என்னுடைய கருத்தை, அகில இந்திய கட்சித் தலைமையிடமும், துறை அமைச்சர்களிடமும் தெரிவித்து வருகிறேன்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு நீர் தரத் தேவையில்லை’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், எடியூரப்பாவோ,` பா.ஜ.க. வெற்றி பெற்றால் இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படும், காவிரி பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று கூறியிருக்கிறார், அதனால், காங்கிரஸ் தி.மு.க. நடைபயணத்தை நிறுத்தச் சொல்லுங்கள். இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையிலும் தமிழக மக்களை ஏமாற்றியது போதும். பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது சரியானது அல்ல. இது சம்பந்தமாக முதலமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லையே?. சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடந்துள்ளது’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க