புதிய பாடத்திட்டம்: மக்களிடம் ஆலோசனை கேட்கும் என்.சி.இ.ஆர்.டி.

சமகால கல்வி முறையை மாற்றி அமைக்க ஒவ்வொரு ஆண்டும்

 சமகால கல்வி முறையை மாற்றி அமைக்க ஒவ்வொரு ஆண்டும் அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை செய்து புதிய கல்வித்திட்டங்களை அறிவிக்கின்றன,  ஆனால், நாம் எதிர்பார்த்த மாற்றம் முழுமையாக வந்தபாடில்லை. அதற்குக் காரணம், தனியார் பள்ளிகள் மீதான மக்களின் ஈர்ப்பு. அவர்கள் செய்யும் விளம்பரம். முழுக்க முழுக்க கல்வியை வியாபாரமாக்கி மாணவர்களை இயந்திரக்களாக்கிய கல்வி முறைதான்.

இந்தநிலையில் பள்ளி மாணவர்களின், பாடத்திட்டம், பாடச்சுமையை குறைக்க மத்திய அரசின் தேசிய கல்வி அராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம், பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. நம்முடைய ஆலோசனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சில உதாரணங்களை தெரிவித்துள்ளார்கள். 

புதிய பாடத்திட்டம்

கல்வி என்பது ஏட்டறிவு மற்றும் தேர்வில் விறுவிறுப்பாக பதில்களை எழுதவது மட்டும் ஆகாது, விளையாட்டு, வாழ்க்கைத் திறன்கள், படைப்புத் திறன்களுடன் அனுபவ பயிற்சி ஆகியவையே ஆளுமை மேம்பாட்டுக்கு அவசியமானது, மாணவர்கள் இன்று பாடத்திட்டம் சுமை காரணமாக மன அழுத்தத்தை உணர்கிறார்கள். இதுபோன்ற விஷயங்ககளை கவனத்தில் எடுத்துக்கொண்டு மாணவர்களின் அனைத்து மேம்பாட்டுக்காக முடிந்தளவு நடப்பிலுள்ள பாடத்திட்டத்தை ஆய்வுசெய்ய என்.சி.இ.ஆர்.டி. முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக மக்களின் ஆலோசனைகளை அவர்களின் http://mhrd.gov.in/suggestions/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்புமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!