நாகர்கோவில் அருகே பயணிகள் ரயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு!

நாகர்கோவிலில் பாசஞ்சர் ரயில் மோதிய விபத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் பாசஞ்சர் ரயில் மோதிய விபத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் விபத்தில் உயிரிழந்த பெண் டிக்கெட் பரிசோதகர்

ரயில்வே பரிசோதகர் மீராதிருநெல்வேலி ரயில்வே குடியிருப்பில் வசிப்பவர் மீரா (37). இவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்தார். திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக திருநெல்வேலியிலிருந்து அந்த ரயிலில் ஏறியிருக்கிறார். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு செல்லாமல் டவுன் ஸ்டேஷன் வழியாக செல்லும். இந்த நிலையில், கோட்டாறு ரயில் நிலையத்தை அடுத்த இந்திரா நகர் பகுதியில் சிக்னலுக்காக திருச்சி இன்டர்சிட்டி ரயில் நின்றிருக்கிறது. அப்போது ரயிலிலிருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்து சென்றிருக்கிறார் மீரா.

அப்போது கொல்லத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், பரிசோதகர் மீரா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மீரா, சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!