73 % மதிப்பெண் பெற்ற பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவி !

பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த டெல்லி மாணவி, கடைசியாக எழுதிய தேர்வில் 73 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த ஃபிசியோதெரபி மாணவியின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அந்த மாணவி 73 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 1100 மதிப்பெண்களுக்கு 800 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார் அந்த மாணவி.

பொதுவாக 55 முதல் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுவந்த அந்த மாணவி, இந்தத் தேர்வில்தான் அதிகபட்சமாக 73 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். ஃபிசியோதெரபி

ஆர்த்தோபிடிக்ஸ் பாடத்தில் 200க்கு 124 மதிப்பெண்களும், ஃபிசியோதெரபி நியூராலஜியில் 147ம், ஃபிசியோதெரபி கார்டியாலஜியில் 144 மதிப்பெண்களும், பயோஸ்டாடிக்சில் 100க்கு 74 மதிப்பெண்களும், ப்ராஜெக்ட்டில் 200க்கு 160 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

இதற்கிடையில் மாணவி படித்துவந்த சாய் கல்வி நிறுவனமானது இதுவரை அந்த மாணவி செலுத்திய 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டயத்திற்கான காசோலையை அவரது பெற்றோருக்கு திரும்ப அளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!