தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் 14,800 மெட்ரிக் டன் மாட்டுத்தீவனம் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

வ உ சிதம்பரனார் துறைமுகம்

இது குறித்து வ.உ.சி. துறைமுக சபை சேர்மன் ஜெயக்குமார்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்திய துறைமுகங்களில் சிறப்பு பெற்ற தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு பெட்டகம், நிலக்கரி, மாட்டுத்தீவனம் ஆகிய சரக்குகள் கையாளுதலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.  இத்துறைமுகம், கடந்த 03.04.18 அன்று ’எம்.வி. மேரே கிளோவிடா’ என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 14,800 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய சாதனையான கடந்த 06.03.18 அன்று ’எம்.வி.கிளப்பர் லிஸ்’ என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் கையாளப்பட்ட அளவான 10,748 மெட்ரிக் டன்களை விட 4,052 மெட்ரிக் டன்கள் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 1,38,969 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாண்டுள்ளது.  இந்த நிதியாண்டில் 23,953 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டுள்ளது. இங்கு ஏற்றுமதியாகும் தீவனமானது, கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளுக்கும், எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைத் தீவனங்கள் உக்ரேன் நாட்டில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியால்தான் இச்சாதனை படைக்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!