அ.தி.மு.க-வின் போஸ்டர் புகழ் கிரம்மர் சுரேஷ் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..!

அ.தி.மு.க-வின் புரட்சித் தலைவி அம்மா பேரவை மதுரை செயலாளராக இருந்த கிரம்மர் சுரேஷ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க-வின் புரட்சித் தலைவி அம்மா பேரவை மதுரை செயலாளராக இருந்த கிரம்மர் சுரேஷ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு அ.தி.மு.க தலைமை கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றுமுன்தினம் (7/4/18) தான் அவர் அம்மா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். பதவி அளிக்கப்பட்ட ஒரே நாளில் அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் அ.தி.மு.க போஸ்டர்களுக்கு புகழ் பெற்ற கிரம்மர் சுரேஷ் 'காவிரியை வெச்சுக்க... எங்கம்மா வேணும்’ என்று ஒரு குழந்தை அழுதுகொண்டு சொல்வது போன்று, உலகத் தலைவர்களுக்கெல்லாம் ஐ.நா சபையில் ஜெயலலிதா பாடம் நடத்துவது போன்று வித்தியாசமான போஸ்டர்கள் மூலம் தமிழகத்தில் போஸ்டர் புரட்சி நடத்தி வந்தவர். 

ஜெயலலிதா இறந்த பின்பு சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் அடித்தார், சசிகலா கைதுக்குப் பிறகு தற்போதுவரை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணியில் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!