காவிரி விவகாரம் -  மெல்போர்ன் பாராளுமன்ற வாசலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..!

காவிரி விவகாரம் -  மெல்போர்ன் பாராளுமன்ற வாசலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வலியுறுத்தி, மெல்போர்ன் பாராளுமன்ற வாசலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலைகளை மூடக்கோரி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வலுத்துவருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தங்கள் பகுதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில், மெல்போர்ன் பாராளுமன்ற வாசலில் திரண்ட தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலை, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தினர். 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 450 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்குப் பின், மெல்போர்னில் நடக்கும் மற்றுமொரு போராட்டம் இதுவாகும்.

தம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் தாமிரத் தொழிற்சாலையால் அவதியுறும் தூத்துக்குடி மக்களுக்கும் ஆதரவாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!