வெளியிடப்பட்ட நேரம்: 02:03 (09/04/2018)

கடைசி தொடர்பு:07:27 (09/04/2018)

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை (10.4.2018) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. மும்பையில் இருந்து நேற்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியினர், பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. சென்னையில் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என்று போராட்டக்காரர்களும், பிரபலங்களும், பல்வேறு அமைப்பினரும் கூறிவருகின்றனர். கிரிக்கெட் போட்டி நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்துவோம் என்று சில அமைப்பினர் கூறியிருந்த நிலையில், சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட திட்டமிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களும் இன்று மாலை சென்னை வரவுள்ளனர். அவர்கள் தங்கவிருக்கும் எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதிக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க