Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`அவள் சொன்ன வார்த்தை எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது' - மனைவியைக் கொன்ற பாலகணேஷ் பகீர் தகவல் 

கொலை 

குழந்தை இல்லாதது பற்றிய தகராறில்... ஆண்மையற்றவன் என்று தன்னைக் கூறியதால், மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததாகப் பாலகணேஷ் போலீஸாரிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 சென்னை, வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தவர், பாலகணேஷ். இவரின் மனைவி ஞானப்பிரியா. இவர், கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். பாலகணேஷும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஞானப்பிரியாவின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால், நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். ஆனால், அதுதொடர்பான கோணத்தில் விசாரித்தபோது, போலீஸாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 
இதனால், போலீஸாரின் சந்தேகம் பாலகணேஷ்மீது விழுந்தது. அவரிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, குழந்தை இல்லாததால் மனைவியைக் கொலைசெய்ததாகப் பாலகணேஷ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

கொலை

 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், இருவரும் மனவேதனையில் இருந்துள்ளனர். அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டுவந்தனர். சிகிச்சையில் பாலகணேஷுக்கு மருத்துவரீதியாகச் சில சிக்கல்கள் இருந்தன  ஞானப்பிரியாவுக்குத் தெரியவந்தது. குழந்தை இல்லாததற்குக் காரணம் பாலகணேஷ்தான் என்று தெரிந்ததும், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி இரவும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, 'நீ ஆண்மையற்றவன்' என்று பாலகணேஷை ஞானப்பிரியா திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகணேஷ், அவரின் நண்பர் மனோஜ் உதவியுடன் ஞானப்பிரியாவைக் சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பிறகு, நகைக்காகக் கொலை நடந்ததாகப் போலீஸாரை நம்பவைக்க தங்கச் செயினை எடுத்துச் சென்றுள்ளார் மனோஜ். இவரும் சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து, இருவரையும் கைதுசெய்துள்ளோம். இவர்களிடமிருந்து 15 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement