Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.எஸ்.டியால் முடங்கிய 450 கோடி... ஜவுளி ஏற்றுமதியாளர்களின் தீராத வேதனை!

``வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்தும், மத்திய அரசிடமிருந்து இன்னமும் வரவேண்டிய `கிளைம்' தொகையான 450 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது. இதனால், நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி தொழிலைத் தொடர்ந்து செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்" என்கின்றனர் கரூர் மாவட்டத் துணி ஏற்றுமதியாளர்கள்.

வீட்டு உபயோகத் துணிகள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் பிரசித்திபெற்றது, கரூர் மாவட்டம். இங்கு, இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல், 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களும் கரூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய `கிளைம்' தொகையான 450 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்க, அதனால் தங்களது ஏற்றுமதி தொழிலும் முடங்கும் சூழலில் இருப்பதாகக் கண்ணீர் சிந்துகிறார்கள்.

ஜவுளி

 இதுபற்றி நம்மிடம் பேசிய, ஸ்ரீசாய்சேஷன் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான சுந்தரேசன், `` `வரி மீது வரி' காரணமாக வரிச்சுமை அதிகரித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பரிசீலனையில் இருந்த ஜி.எஸ்.டி வரியைக் கடந்த ஜூலை மாதம் அமலுக்குக் கொண்டுவந்தது மத்திய அரசு. பொருள்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டுக்கான இலக்கு அடிப்படையிலான வரியாக இது வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்புக் கூடுதல் கலால் வரி, சேவை வரி, அதைத் தவிர மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, ஆடம்பர வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை வரி, கொள்முதல் வரி என்று அனைத்து வரிகளும் ஜி.எஸ்.டி வரி என்கிற ஒரு குடைக்குள் கொண்டுவரப்பட்டன.

 

 உள் மாநிலத்தில் விற்பனை மற்றும் சேவை ஒரு நிதியாண்டில் ரூ 20 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு சுந்தரேசன் அளிக்கப்படுகிறது. அதேசமயம், ஒரே ஒரு சேவை மற்றும் விற்பனை வேறு மாநிலத்தில் செய்தால்கூட, ஜி.எஸ்.டி பதிவு அவசியமாகக் கருதப்படுது. ஜி.எஸ்.டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்படும் நபர்கள், வாட் வரி விதிப்பில் பெறப்படும் தற்காலிக `ஐ.டி' மற்றும் `பாஸ்வேர்டு' மூலம் ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவு செய்ய முடியும். கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி வரிச்சட்டம் குறித்து வர்த்தகர்களால் இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறமுடியவில்லை. அதேசமயம், சட்டம் அமலுக்கு வந்து 9 மாதங்களைக் கடந்தும் ஆன்லைன் சர்வர் இன்னமும் சில இடங்களில் முழுமையாகச் செயல்படவில்லை. இப்படிப் பல தரப்பிலும் புகார் எழ, அதன் காரணமாக ஜி.எஸ்.டி வரி பதிவுக்கால அவகாசம் இன்னும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது" என்றார்.

 காங்கிரஸ் கட்சியின் கரூர் நகரத் தலைவரும்,ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன உரிமையாளருமான ஸ்டீபன்பாபு, ``ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தபோது, வர்த்தகர்களால் செலுத்தப்படும் வரியில் `கிளைம்' எனப்படும் குறிப்பிட்ட சதவிகிதத் தொகை சம்பந்தப்பட்ட வர்த்தகரின் வங்கிக் கணக்குக்கு அந்தந்த மாதமே திருப்பிச் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஆன்லைன் சர்வர் திறக்கப்படும், மாதந்தோறும் அளிக்க வேண்டிய `கிளைம்' தொகை இதுவரை கரூர் ஜவுளி வர்த்தகர்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை. கடந்த 9 மாதங்களாக எங்களுக்குச் செலுத்தப்பட்ட தொகை கிணற்றில் போடப்பட்டக் கல்லாகக் கிடக்கிறது. இதனால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரில், பின்னலாடை ஏற்றுமதியில் மட்டுமே மத்திய அரசிடமிருந்து ரூ.1,200 கோடி முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. கரூரைப் பொறுத்தவரை இந்தத் தொகை 450 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால், ஜவுளி ஏற்றுமதி தொழிலைத் திறம்பட நடத்தமுடியாமல்ஸ்டீபன்பாபு திணறி வருகிறோம்.

 இந்தக் `கிளைம்' தொகை பற்றி மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தவிதமான தெளிவான விளக்கமும் வரவில்லை. வரித் தாக்கல் செய்ய ஆன்லைன் பதிவு தாமதமானால் மட்டும், அதற்கு உடனே அபராதம் வசூலித்துவிடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரி, இனங்களில் திருப்பி அளிக்கப்படாமல் முடங்கிக் கிடப்பது, எங்களுடைய அடிப்படை மூலதனம் என்பதை மத்திய அரசு உணர மறுக்கிறது. ஏற்கெனவே சீனா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான தொழில் போட்டிகளுக்கு நடுவில்தான் சொற்ப லாபத்தில் ஏற்றுமதிகளைத் தக்க வைக்கிறோம். இந்தத் தொகை முடங்கியுள்ளதால் அந்த வாய்ப்பும் கைநழுவிப் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இதற்கிடையில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் `எஸ்.ஜி.எஸ்.டி' என மாநில அரசுக்கு 50 சதவிகிதம் வரித்தொகை செல்கிறது. இதனால், மாநில விற்பனை வரித்துறையினர் வரி விதிப்பில் தலையிட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், `கிளைம்' தொகையை விரைவில் பெற்றுத் தருவதாகக் கூறி, மொத்த தொகையில் சதவிகிதம் கணக்கில் ஏற்றுமதியாளர்களிடம் கமிஷன் கேட்டு நச்சரிக்கும் போக்கையும் அதிகாரிகள் சிலர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். உடனே, முடங்கிக் கிடக்கும் `கிளைம்' தொகையை மத்திய அரசு ரிலீஸ் செய்ய வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement