காமாட்சி அம்மன் கோயிலில் லதா ரஜினிகாந்த் தரிசனம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 10 நாள்கள் நடக்கும் யாகத்தில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

காமாட்சி அம்மன் கோயில், லதா ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக இன்றிலிருந்து 10 நாள்கள் ஸ்ரீதசா மஹாவித்யா யாகம் நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற யாகத்தில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். யாக நிகழ்வுகளை முடித்துக்கொண்ட லதா ரஜினிகாந்த், காமாட்சி அம்மனை வழிபட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “உலக நன்மை வேண்டி காமாட்சி அம்மன் கோயிலில் யாகம் நடப்பதை கேள்விப்பட்டு வந்திருக்கிறேன். தற்போது தமிழகத்தில் நடக்கும் சூழலை எல்லோரும் அறிவார்கள். அனைத்து தரப்பு மக்களும் அமைதியான முறையில் வாழ வேண்டும் எனக் காமாட்சி அம்மனை வேண்டிக்கொள்கிறேன்” என்றவர் காவிரி பிரச்னை குறித்த கேள்விகளுக்கு, இங்கு அரசியல் வேண்டாம்' எனப் பதில் கூறுவதை தவிர்த்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து ‘ரஜினிகாந்த்தும் யாகத்துக்கு வருவாரா’ என்ற கேள்விக்கு `அவரின்  நிகழ்ச்சிகள் குறித்து எனக்குத் தெரியாது’ என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!