வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (09/04/2018)

கடைசி தொடர்பு:15:13 (09/04/2018)

மதுரை தி.மு.க கவுன்சிலர் ஆபீஸில் வெடிகுண்டு வீச்சு!

மதுரையில இன்று நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருந்தவர் செங்கிஸ்கான். தி.மு.க நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய கட்சி அலுவலகம் மூன்றுமாவடி பரசுராம்பட்டி சாலையில் உள்ளது. அவர்  வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை அவர் அலுவலகம் மூன்று நாட்டு வெடிகுண்டுகளைச் சிலர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். 

மதுரையில் வெடிகுண்டு

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருடன் மாநகர காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் வெடித்தும் வெடிக்காத மூன்று நூலில் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கண்டெடுத்து அதை செயல் இழக்க வைத்தனர்.

அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த செங்கிஸ்கானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகிறது போலீஸ். இத்தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகு, இந்த விவகாரத்தில் உண்மைகள் தெரியவரும்.

நீண்ட நாள்களுக்குப் பின் மதுரையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க