தனியார் பள்ளி இடம் ஒதுக்கீடு... தடுமாறும் ஜப்பான் அரசு! 

தனியார் பள்ளிக்குக் குறைந்த விலைக்கு அரசு இடத்தை ஒதுக்கீடு செய்ததற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

தனியார் பள்ளி இடம் ஒதுக்கீடு... தடுமாறும் ஜப்பான் அரசு! 

தனியார் பள்ளிக்கு குறைந்த விலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகும் அளவுக்கு பிரச்னை பெரிதாகிறது.

ஜப்பான்

`மொரிடோமோ காகுன் என்ற தனியார் பள்ளிக்கு, அரசு குறைந்த விலையில் இடத்தை ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் ஷின்சோ அபே உடனே பதவி விலக வேண்டும்' என்று ஜப்பான் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்தப் பிரச்னையால், மூன்றாவது முறையாக ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஷின்சோ அபே தேர்ந்தெடுக்கப்படுவது தடைப்பட வாய்ப்புள்ளது. மீண்டும் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் இவரது கூட்டணி அரசைத் தொடரவும்`ஜப்பானில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பிரதமர்' என்ற பெயரையும் பெற முடியும். 

பிரதமர் ஷின்சோ அபே ஜப்பான் நாடாளுமன்றத்தில், `இந்த நில விற்பனை விவகாரத்துக்கும் தனக்கும், தன் மனைவிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை அவ்வாறு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், பதவி விலகவும் தயாராக இருப்பதாக' அறிவித்திருக்கிறார். 

ஜப்பான்

இந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மொரிடோமோ காகுன் பள்ளியின் கெளரவ முதல்வராக நியமிக்கப்பட்டார் பிரதமரின் மனைவி அகீ அபே. இவர் கெளரவ முதல்வராக இருக்கும்போதுதான் மேற்கு ஜப்பானில் ஒசாகா மாநிலத்தில் பள்ளிக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 956 மில்லியன் யென் மதிப்பு உள்ள இடத்துக்கு 820 மில்லியன் யென் குறைத்து வழங்கியிருக்கிறது அரசு. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அரசு மானியத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றது தொடர்பாகப் பள்ளியின் நிர்வாகிகள் ஒசாகா நீதித்துறை கைதுசெய்துள்ளது. 

ஷின்சோ அபேயின் அமைச்சரவை குறித்து பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த ஆறு மாதங்களில் ஐந்து புள்ளிகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!