`நாளை சேப்பாக்கம் காலியாக இருக்கணும்' - ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் குறித்தும் திரைப்படத்துறை சார்பாக நேற்று அறவழிப் போராட்டம் நடந்தது. இன்று இயக்குநர் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், பெஃப்சி தலைவர் செல்வமணி ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் குறித்தும் திரைப்படத்துறை சார்பாக நேற்று அறவழிப் போராட்டம் நடந்தது. இன்று இயக்குநர் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், பெஃப்சி தலைவர் செல்வமணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செல்வமணி

அப்போது பேசிய செல்வமணி, "உலகக் கவனத்தை ஈர்க்க நாளைக்கு சேப்பாக்கம் காலியாக இருக்கச் செய்வோம். அதற்கு எல்லா தமிழர்களும் ஒத்துழைக்க வேண்டும். காலியாக இருக்கும் மைதானம் தமிழ்நாட்டுடைய வெற்றியாகக் கருதப்படும். இரண்டு வருடம் சூதாட்டம் காரணமாக விளையாடாமல் இருந்த சி.எஸ்.கே-வுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் தஞ்சை விவசாயிகளுக்காகக் கொடுக்கமாட்டீர்களா" என்று  ஆவேசமாகப் பேசினார்.

சத்யராஜ்

"முதல்வரைப் பார்க்கப் போனோம். முதலமைச்சரே அது என் கட்டுக்கோப்புக்குள் இல்லை என்று சொல்லும்போது, எங்கள் சுயதர்மமும் சுய உரிமையும் பறிக்கப்பட்டதுபோல உணர்கிறோம். போராட்ட வழிமுறைகளை வெளியே சொல்ல மாட்டோம். ஆனால், தார்மீக அடிப்படையில் போராட்டம் நடத்தப்படும். கொடி, கொள்கைகளைத் தூக்கி வைத்துவிட்டு வாருங்கள். எல்லாரும் சேர்ந்தே போராடுவோம்" என்று பாரதிராஜா ஐ.பி.எல் புறக்கணிப்பு பற்றி பேசினார். "உண்மையான களப் போராளிகளுக்குப் பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் எல்லா விளையாட்டுக்கும் ஆதரவானவன்தான். ஆனால்,  காவிரிக்காகப் போராட்டம் நடந்துவரும்போது ஐ.பி.எல் வந்தால் சரியிருக்காது. எந்த ஐ.டி ரெய்டுக்கும் நான் அஞ்ச மாட்டேன்" என்று தமிழிசை கூறியதற்கு சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

இறுதியாக, சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், கலைஞர்கள் இணைந்து தமிழர்களின் உரிமைகளைப் பண்பாட்டைக் காக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆரம்பிக்கப்படுகிறது எனக் கூட்டாக அறிவித்தனர். இதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், தங்கர் பச்சான், கெளதமன், தயாரிப்பாளர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!