Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்

உச்ச நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் தீர்ப்பு வழங்கியதை அடுத்து நாடு முழுவதும் தலித் மக்கள் போராடி வரும் நிலையில் சேலத்தில் சாதி வெறிக்கு எதிரான தலித் வழக்கறிஞர்கள் இயக்கத்தினர் நீதி கேட்டு சேலம் அம்பேத்கர் சிலையிலிருந்து சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டார்கள்.

வன்கொடுமை

 

இதுபற்றி பேசிய சேலம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி, ''1989-ல் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துபோகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த வன்கொடுமை சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது. இந்த வழக்கின் அடிப்படையில் யாரையும் கைது செய்யக் கூடாது. கைது செய்யப்பட்டால் உடனே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி இருப்பது தலித் மக்களை வஞ்சிக்கும் செயலாக இருக்கிறது.

இந்தியாவில் இன்னும் சாதிய கொடுமைகள் நடந்துகொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பிலும் சாதிய பாகுபாடுகள் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தச் சட்டத்தை இன்னும் கடுமையாக்காமல் இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்வதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்திருக்கும் நிலையில் இதற்காக 9 பேர் வடநாட்டில் உயிரிழந்திருக்கிறார்கள். மத்திய அரசு இந்த வன்கொடுமை சட்டத்தை மாற்றி அமைக்காமல் பழைய முறைப்படியே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மனு அளித்திருக்கிறது. அதன்படி உச்ச நீதிமன்றம் வன்கொடுமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வராமல் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement