`தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறார்' - ஆளுநர்மீது அ.தி.மு.க எம்.எல்.ஏ சரமாரி குற்றச்சாட்டு!

''தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி இல்லையா. ஆளுநரின் செயல்பாடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது'' என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் ஜெயங்கொண்டம் அ.தி.மு.க எல்.எல்.ஏ. துணைவேந்தர் நியமனத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் எம்.எல்.ஏ பேசியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                ஆளுநர்- சூரப்பா

கடந்த 2 ஆண்டுகளாகக் காலியாக இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆனால், தமிழக அரசு சூரப்பா நல்ல திறமையானவர் என்று வாரிகட்டிக்கொண்டு ஆனால், தமிழக அரசு சிவப்புக் கம்பலம் போட்டு ஆதரவு அளித்தது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்திருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                               ஜெயங்கொண்டம் எல்.எல்.ஏ ராமஜெயலிங்கம் பேசுகையில், ``தமிழக ஆளுநர் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்பவரைத் துணை வேந்தராக நியமனம் செய்துள்ளார். இவர் எந்த ஒரு குழுவாலும் நியமிக்கப்படாதவர். இதேபோல் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரைக்கப்படாத ஒருவரை நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராகப் பதவி ஏற்றது முதல் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறார். தமிழகத்தில் எத்தனையோ திறமையான அதிகாரிகள் இருந்தும்கூட தமிழகத்தில் பதவிக்கு தமிழர்களை நியமிக்காமல் வேண்டுமென்றே தன்னிச்சையாக, தமிழக அரசிடம் ஆலோசனை செய்யாமல் நியமனம் செய்திருப்பது கண்டனத்துக்கு உரியச் செயல் ஆகும். அப்படியென்றால் தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களே இல்லையா?" எனக் கேள்வியை எழுப்பினார்.

குழு பரிந்துரை செய்யாத ஒருவரைத் துணை வேந்தர்களாக நியமனம் செய்வது தமிழர்களை மிகவும் அவமானப்படுத்துவதாகும். தமிழர்களுக்கு துணைவேந்தர்களாக வருவதற்குத் தகுதி இல்லை, திறமை இல்லை என்பதுபோல் உருவகப் படுத்திவருகிறார் தமிழக ஆளுநர். எனவே எந்த ஒரு தமிழனும் இது போன்ற நடவடிக்கை செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!