Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புக்கொடிகளுடன் ஆம்புலன்ஸ்... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுக்கு எதிர்ப்பு..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் போராடி வரும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கறுப்புக்கொடிகளோடு தங்கள் சேவைகளைச் செய்து வருவது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம்

 

இதுபற்றி பேசிய சேலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் பொறுப்பாளர் மணி, ``காவிர் நீர் என்பது தமிழகத்துக்குத் தவிர்க்க முடியாத ஜீவ நீர். காவிரி நீர் தமிழகத்தில் விவசாயத்தைத் தாண்டி லட்சக்கணக்கான மக்களுக்குக் குடிநீராக இருந்து வருகிறது. தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் எப்போது காவிரியிலிருந்து தண்ணீர் வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காவிரி நீரை நம்பி தமிழக மக்கள் இருக்கிறோம். குடிப்பதற்கு கூட தண்ணீர் தராமல் இருப்பது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தராத மாநில அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆம்புலன்ஸில் கறுப்புக் கொடிகளைக் கட்டிக்கொண்டு எங்களுடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கின்றன.

சேலம் அரசு மருத்துவமனை, ஓமலூர், ஆத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பைப்பாஸ்களில் ஆம்புலன்ஸ் ஸ்டேண்ட் இருக்கிறது. இங்கு உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் கறுப்புக்கொடிகளோடு கண்டனத்தைப் பதிவு செய்து, எங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement