Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரமா... மனைவியா? - மரம் மனிதராக மாறிய செல்வக்குமார்!

 ``இப்படி உடம்பு முழுக்க மரக்கன்றுகளோடு பைத்தியக்காரன் மாதிரி அலையக் கூடாது. வாங்குற சம்பளத்த இப்படி மரம் வளர்ப்பைப் பற்றி விழிப்பு உணர்வு பண்ணவே செலவழிச்சா, நாம சாப்பிடுறது எப்படி. இந்தக் கோமாளித்தனத்தை இன்னையோட விட்டுடறதா இருந்தா, சேர்ந்து வாழுவோம். இல்லைன்னா, விவாகரத்து வாங்கிகிட்டு பிரிஞ்சுடுவோம். எது முக்கியம்னு முடிவு பண்ணிக்க'ன்னு என் மனைவி கேட்டாங்க. 10 நிமிஷம் உட்கார்ந்து யோசிச்சேன். எனக்கு மனைவியைவிட, இந்தத் தமிழ்நாடே நல்ல தண்ணி, நல்ல காத்து, மரங்கள் படர்ந்த பசுமை பிரதேசத்தில் சுகமா வாழணும்ங்கிறது பெருசா தெரிஞ்சுச்சு. அதனால், கல்யாணம் ஆன எட்டே மாசத்துல மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டு, `மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்'ன்னு ஊர் ஊரா மரக்கன்றுகள் தொங்கும் அங்கியை அணிஞ்சுகிட்டு விடாம விழிப்பு உணர்வு பிரசாரம் பண்ணிட்டு இருக்கிறேன்" என வார்த்தைகளில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் பேசுகிறார் `மரம் மனிதர்' செல்வக்குமார். மரம் மனிதர் செல்வக்குமார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர்தான் இந்தச் செல்வக்குமார். அவினாசி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். மாதத்தில் 10 நாள்களுக்கு மேலாக ஒவ்வொரு மாவட்டமாக மக்கள் கூடும் இடங்களுக்குப் போகும் இவர், உடம்பில் அணிந்திருக்கும் வித்தியாசமான அங்கியில், 71 பாக்கெட்களைத் தைத்து, அவற்றில் 71 மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு, 150 கிலோ எடையோடு `பசுமை பயணம்' என்கிற பெயரில் அலைகிறார். மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்துவதே இவர் மேற்கொள்ளும் தலையாயப் பணி. அத்தகைய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக கரூர் வந்தவரைச் சந்தித்தபோதுதான், தனது மனைவியை இதற்காகவே விவாகரத்து செய்ததை சாதாரணமாகச் சொன்னார்.

மேற்கொண்டு அவரிடம் பேசினோம். ``இதுவரை, இப்படி 50,000 மரக்கன்றுகளை வழங்கியிருப்பேன். இந்தச் சூழலில், எனக்கும், பியூலாவுக்கும் 2014 மே மாசம் திருமணம் நடந்துச்சு. திருமணத்திற்கு முன்பு எனது இந்தச் செயல்பாட்டை பாராட்டிய மனைவி, திருமணத்துக்குப் பிறகு கண்டிக்க ஆரம்பிச்சாங்க. ஒருகட்டத்துல, `நான் முக்கியமா, இந்தப் பைத்தியக்காரச் செயல்பாடு முக்கியமா?'ன்னு அவர் கேட்க, `பைத்தியகாரச் செயல்பாடுதான் முக்கியம்'ன்னு அவரை விவாகரத்து பண்ணிட்டேன். அதிலிருந்து, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம செயல்படுறேன். 24 மாவட்டங்களில் இதுவரை இப்படி விழிப்பு உணர்வு பிரசாரம் பண்ணியிருக்கேன். அதோடு, பிளாஸ்டிக்குகளின் தீமைகள், தீபாவளி நேரத்துல வெடி வெடிப்பதால் காற்று மாசுபடுவதைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு செய்கிறேன். எனது இந்த விழிப்பு உணர்வு தொடரும்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement