வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (09/04/2018)

கடைசி தொடர்பு:19:41 (09/04/2018)

`Mercury' படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Mercury

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன் சனத், தீபக் பரமேஷ் நடித்திருக்கும் படம் 'Mercury'. இந்தப் படத்தின் டீஸர் ஏற்கெனவே வந்திருந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரும் வந்திருக்கிறது. அதில், ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடைபெறுவதால் தமிழ்ப் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் இருந்து வருகிறது. ஆனால், இந்தப் படம் எந்த மொழியையும் வைத்து எடுக்காமல் சைலன்ட் மூவியாகக் கார்த்திக் சுப்பராஜ் எடுத்திருப்பதால், 'Mercury' படத்தை வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யும் பிளானில் இருக்கிறார்கள். 

 

 

கார்த்திக் சுப்பராஜின் இந்த முடிவுக்கு பல எதிர்வினைகள் வருவதால், 'Mercury' படத்தில் ட்ரெய்லர் ‘இந்திய சினிமாவில் 30 வருடங்களுக்குப் பிறகு வெளிவரும் சைலன்ட் மூவி என்ற வாசகத்தோடு ஆரம்பித்தும், நோ லாங்குவேஜ் ஃபிலில் என்ற அறிவிப்போடும் முடிகிறது. அதே போல் ட்ரெய்லரில் எந்த இடத்திலும் நடிகர்களின் பெயரையோ படத்தின் பெயரையோ தமிழில் போடவில்லை.