'அவர்கள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலின் நடக்கனும்னு ஆசைப்படுறாரு. நடக்கட்டும். அதிமுகவைப் பொறுத்தவரையில்

அமைசார் ராஜேந்திர பாலாஜி

 ''ஸ்டாலின் நடக்கனும்னு ஆசைப்படுறாரு. நடக்கட்டும். அதிமுகவைப் பொறுத்தவரையில் காவிரி விஷயத்தில் எப்போதும் ஒரே கொள்கைதான்'' என்றார். விருதுநகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தைப்  பார்வையிட வந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அப்போது அவர்  செய்தியாளர்களிடம் பேசும்போது, '' பிரதமரையே தேர்வு செய்யும் இடத்தில் இருந்தபோது திமுக, காவிரி விஷயத்தில் தீர்வு காண முயற்சிக்கவில்லை. அதிகாரம் போனதுக்கப்புறம் போராட்டம் நடத்துகிறார்கள். பிரதமர் தமிழகம் வரும்போது முதலமைச்சர் சந்திப்பார். கோரிக்கை வைப்பார், காவிரி விஷயத்தில் அழுத்தம் கொடுப்பார். காவிரி, பாலாறு , முல்லைபெரியாறு, கச்சத்தீவு எல்லாப்  பிரச்சனைகளுக்கு காரணம் திமுகதான். 

பிரதமர் வரும்போது கறுப்புக்கொடி  காட்டப்போவதாக  ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். கறுப்புக்கொடி  காட்டி பிரதமரை உசுப்பேற்றப்  பார்க்கிறார்கள். இது நல்ல செயல் கிடையாது. பிரதமரிடம் சண்டை போடுவதால் என்ன பிரயோசனம்  . இதுவா நமது  வேலை  . அவர்கள் கறுப்புக்கொடி  காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டி  வரவேற்போம். தேவையில்லாமல் சண்டை போடுவது தமிழக அரசின் வேலை இல்லை. இப்ப ஒரு ஊருல  சப் இன்ஸ்பெக்டர் இருக்காரு,  அவர்கிட்டே சண்டை போட்டுட்டா,  யாருகிட்டே மனு கொடுக்கிறது? அது மாதிரிதான் இருக்கிறது  தி.மு.க-வின் செயல்.  நாங்கள் அமைதியான முறையில் தமிழக உரிமைகளைப்  பிரதமரிடம் கேட்டுப் பெற விரும்புகிறோம். காவிரிக்காக நாடாளுமன்றத்தை ஒருமாதமாக முடக்கி  வைத்துள்ளோம். இதைவிடக்  காவிரியில் எங்களைப்போல் யார் அழுத்தம் கொடுத்தது...?'' என்றார்  . 

 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!