Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’காவிரி விவகாரத்தில் மத்திய பா.ஜ.க., தமிழகத்தை வஞ்சித்து வருகிறது’ ச.ம.க குற்றச்சாட்டு!

காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க கோரி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சமத்துவ மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை அமல் படுத்தக்கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோஷங்களை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுப்பற்றி சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ், ''மத்திய பாரதிய ஜனதா கட்சி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியும் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அரசியல் செய்து வருகிறார்கள். இது எங்கள் தலைவர் சரத்குமார் மிகவும் கண்டித்ததோடு தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய நியூட்ரினோ திட்டங்களையும், மக்களுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையும் உடனே மூட வேண்டும். இதனால் தமிழக மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மேல் பெரும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் தலைவர்களிடம் சொல்லி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லுவதோடு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய தொழிற்சாலைகளை மூட உத்தரவிட வேண்டும்'' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement