ஏரியில் பந்தல் அமைத்து அறவழிப்போராட்டம்... காவிரிக்காக கூடிய எட்டு கிராம மக்கள்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரியில் பந்தல் அமைத்து எட்டு கிராம மக்கள் அறவழிப் போராட்டமும், கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை ஓரத்தில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரியில் பந்தல் அமைத்து எட்டு கிராம மக்கள் அறவழிப் போராட்டமும், கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை ஓரத்தில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் மட்டுமே பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இப்போது அந்தப் போராட்டம் கிராமங்கள் வரை சென்றதோடு பல கிராமங்களை சேர்ந்த மக்களும் சேர்ந்து இதற்காகப் போராட தொடங்கியுள்ளனர். அந்தவகையில், தஞ்சாவூர் அருகே உள்ளது கள்ளப்பெரம்பூர் கிராமம். இந்த ஊரில் உள்ள செங்கல் ஏரி பல வருடமாகவே வறண்டு கிடக்கிறது. இதற்கிடையே, இந்த ஏரியின் உள்ளே பந்தல் அமைத்து கள்ளப்பெரம்பூர், களிமேடு, சக்கரை சாமந்தம் உள்ளிட்ட எட்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் அறவழியில் போராடத் தொடங்கியுள்ளனர். இதேபோல் திருவையாறு அருகே உள்ள காவிரி ஆற்றை ஒட்டியுள்ளது கருப்பூர். இந்த ஊரைச் சேர்ந்த  மக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

saalai orathil unnaviratham

அவர்களிடம் பேசுகையில்,  `எங்களுக்கான வாழ்வாதாரமே காவிரிதான். அப்படிப்பட்ட காவிரி பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளாமல் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் விவசாயம் செழிக்காமல் வெடித்துக் கிடப்பது எங்கள் நிலம் மட்டும் இல்லை எங்கள் மனமும் தான். அதில் மத்திய அரசும், மாநில அரசும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து டெல்டா மக்களுக்கான  நியாயமான நீதியைக் கொடுக்க வேண்டும். அதுவரை எங்கள் கிராமங்களில் தொடங்கிய போராட்டம் இன்னும் பல கிராமங்களுக்குப் பரவுவதோடு அனைத்து மக்களும் இதற்காகப் தொடர் போராட்டங்களை நடத்துவார்கள்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!