அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு தேர்தல் - இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க-வினர்!

அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை கூட்டுறவுப் பணியாளர்கள் சங்கத் தேர்தலுக்கு இரண்டு அணியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டிருப்பது தொழிற்சங்க உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

அண்ணா தொழிற்சஙக பேரவை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மாநிலச் செயலாளராக இருப்பவர் சக்திவேல். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவைச் செயலாளராக இருந்த சின்னச்சாமியின் தீவிர ஆதரவாளர். சமீபத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இவரின் ஆதரவோடு இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் சக்திவேல் என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. சங்கத் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் சர்வீஸ் இருக்க வேண்டும் என்பது விதி. சக்திவேலுக்கு இன்னும் பணி நிறைவு ஆவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் தான் இருக்கிறது. அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை சார்பில் பணியாளர் சங்கத் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இரு அணிகளின் பட்டியலிலும் ஒரு சில வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அண்ணா தொழிற்சங்களின் பேரவையின் தலைவர் தாடி.ராசு இருக்கிறார். கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பொறுப்பாளராக உக்கிரபாண்டியன் சக்திவேல் குருசாமி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மாநிலச் செயலாளர் சக்திவேல் பொறுப்பாளர்கள் குழு உறுப்பினர்களின் அறிவுரையின்படி என்று மாநிலச் செயலாளர் சங்கத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சக்திவேலிடம் பேசும்போது, ``நான் கொடுத்திருக்கும் வேட்பாளர் பட்டியில் கன்வீனர் ஜக்கையன் ஒப்புதலோடு வெளியிட்டிருக்கிறேன். பேரவைத் தலைவர் தனக்கென்று ஒரு அணியை உருவாக்குது வழக்கமாக வைத்திருக்கிறார். தாடி.ராசிடம் காசு கொடுத்து அந்த லெட்டர் பேடு வாங்கி வந்திருக்கிறார்கள். பேரவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தால் கையெழுத்து போட்டிருக்கலாமே ஏன் கையெழுத்து போடல. நான் சின்னச்சாமி அணி கிடையாது'' என்றார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சக்திவேல்

இதுகுறித்து பேரவை சார்பில் கூட்டுறவு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உக்கிரபாண்டி பேசும்போது,  ``அண்ணா தொழிற்சங்க பேரவைதான் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் பேரவை ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. சக்திவேல் சின்னச்சாமியின் தூண்டுதலின் பேரில் இப்படியொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி முதலமைச்சர் துணை முதலமைச்சரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

தி.மு.க வெற்றிக்கு இவர்களின் சண்டை வழிவகுக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்!..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!