சிறை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தென்னை மரம் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தென்னை மரம் குறித்து விகடன் இணையதள செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தென்னை மரம் குறித்து விகடன் இணையதள செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

சிறைச்சாலை

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக காம்பவுண்டை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையின் மற்றொருபுறம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. சிறை பாதுகாப்புக்காக நான்கு மூலைகளிலும் கண்காணிப்பு டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காப்பு கோபுரங்களில் காவலர்கள் யாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவது இல்லை.

இதற்கிடையில் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தை ஒட்டியவாறு ஒரு தென்னை மரம் வளர்ந்து நின்றதால் சிறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருந்தது. இதுகுறித்து 'தென்னை மரத்தில் ஏறினால் சிறைக்குள் செல்லலாம்' என்ற தலைப்பில் கடந்த 2-ம் தேதி விகடன் இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

தென்னை மரம் அகற்றப்பட்ட பிறகு

ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு இரவு நேரத்தில் சிறைக்குள் புகுந்து பிரபல ரவுடி லிங்கம் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிடு அதிகாரிகளை அலர்ட் செய்திருந்தோம்.  இதைத் தொடர்ந்து அதிகாரிகள் துரிதகதியில் செயல்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையை ஒட்டி நின்ற தனியாருக்குச் சொந்தமான தென்னைமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சிறைச்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்கோபுரங்களில் பாதுகாப்புக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டால் இன்னும் கூடுதல் பாதுகாப்பாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!