வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (10/04/2018)

கடைசி தொடர்பு:01:00 (10/04/2018)

கேரளாவில் பந்த் - லிப்ட் கேட்டு கட்சி அலுவலகம் சென்ற முன்னாள் ராணுவ அமைச்சர்!

கேரளத்தில் இன்று நடந்த பந்த் காரணமாக முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கட்சி தொண்டரின் பைக்கில் லிப்ட் கேட்டு காங்கிரஸ் அலுவலகம் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கேரளத்தில் இன்று நடந்த பந்த் காரணமாக முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கட்சி தொண்டரின் பைக்கில் லிப்ட் கேட்டு காங்கிரஸ் அலுவலகம் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பைக்கில் லிப்ட் கேட்டு செல்லும் ஏ.கே.ஆன்றணி

பட்டியலின பிரிவினரை பாதுகாக்கும் சட்டம் பலவீனப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக நடத்தப்பட்ட அகில இந்திய பந்தில் துப்பாக்கிச்சூடு காரணமாக இறந்தவர்களுக்கு நீதி விசாரணை நடத்தக்கேட்டும் கேரள மாநிலத்தில் 12 பட்டியலின பிரிவை சேர்ந்த அமைப்புக்கள் சார்பில் இன்று (9/4/18) பந்த் அறிவிக்கப்பட்டு நடந்தது. வட கேரளத்தில் அமைதியாக பந்த் நடந்தது. தென் கேரளத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு, கட்டாயப்படுத்தி கடைகள் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. பந்த் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்ல ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கட்சி அலுவலகத்துக்கு பைக்கில் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது. பந்த் காரணமாக திருவனந்தபுரம் நகரமே வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது.

கேரளத்தில் நடந்த பந்த் போராட்டம்

இதையடுத்து முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கட்சிகாரர் ஒருவரின் புல்லட் பைக்கில் லிப்ட் கேட்டு வெள்ளையம்பலம் வழுதைகாடு சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போதும் அதே பைக்கில் லிப்ட் கேட்டு பயணித்திருக்கிறார். இதை சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதவாக செயல்படும் விதமாக ஏ.கே.அந்தோணி பைக்கில் சென்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.