Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“மத்திய அரசு நடு நிலையோடு செயல்பட வேண்டும்” - அன்புமணி வேண்டுகோள்!

அன்புமணி கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அரூர் அருகே பிரச்சாரத்தை முடிந்துவிட்டு தருமபுரி திரும்பி கொண்டிருந்த போது அள்ளாலப்பட்டி என்ற இடத்தில் அவர் வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், நீதிபதி ஜீவானந்தம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த அன்புமணி, பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அன்புமணி

அதில், ``காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை இதழில் வெளியிட்ட 6 மாதத்திற்குள் நியாயமாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு போல் மத்திய அரசு விளக்கங்களைக் கேட்டு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடு நிலையோடு செயல்பட வேண்டும். தற்போது கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தாமதப்படுத்துவது தெளிவாக அறிய முடிகின்றது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனால் மத்திய அரசு மீது தமிழகத்தில் விவசாயிகள், இளைஞர்கள் என அனைவரும் கோபத்தில் உள்ளனர். 

எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (11.04.2018) மாநிலம் தழுவிய முழு அடைப்புக்குக் காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து நடத்தும் இந்த முழு அடைப்புக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. இந்த முழு அடைப்பு அமைதியான வழியில் நடைபெறும். 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கான நிதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளில் தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதனால் அவர்களுக்கு அதிக அளவில் நிதி பகிர்ந்து அளிக்கப்படும். இது தென் மாநிலங்களைப் பெரிய அளவில் பாதிக்கும். இது தொடர்பாக நாளை 10.04.2018 கேரளாவில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் மத்திய அரசின் தலையீட்டால் கலந்து கொள்ள மறுப்பதாகத் தகவல் வருகின்றது. கட்டாயம் தமிழக நலனில் அக்கறை கொண்டு தமிழக நிதி அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகள் எதையும் பின்பற்றவில்லை. இதனால் தூத்துக்குடியில் தண்ணீர், காற்று, நிலம் மாசுபட்டுள்ளது. இது போன்ற மோசமான தொழிற்சாலைகள் தமிழகத்தில் நடைபெறக் கூடாது. அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக நூறுகோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது மிகவும் குறைந்த தொகையாக உள்ளது. காரணம் அங்குக் காற்று, நீர், மண் உள்ளிட்ட மூன்றும் கடுமையாக மாசடைந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement