'ஆட்சிக்கு வர முடியவில்லை என்ற ஏக்கத்தில் விமர்சிக்கிறார் பிரேமலதா' – அமைச்சர் கடம்பூர் ராஜூ!

`தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஏக்கத்தில் இந்த இரண்டு கட்சிகளையும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்து வருகிறார்' என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

`தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஏக்கத்தில் இந்த இரண்டு கட்சிகளையும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்து வருகிறார்' என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மாசுக் கட்டுபாட்டு வாரியம் முழுமையான அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளது. அந்த அறிக்கை குறித்து, அரசு உயர்மட்ட அதிகாரிகள், முதல்வர் ஆலோசனை நடத்தி அறிவிக்கும் வரை, மாசுக்கட்டுபாட்டு அறிக்கையினை வெளியிட முடியாது. அது உகந்தாக இருக்காது.  விசாரணைக்கோ அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் சரியாக இருக்காது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆலை தொடர்பாக ஆட்சியரும் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் அரசு ஒரு போதும் அனுமதிக்காது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதனை நாடகம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவர் எழுச்சிப் பயணம்  என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.  

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், கடந்த 1974-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அப்போது யார் முதல்வராக இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். காவிவரி  மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற காலக்கெடு முடிந்தாலும், அந்த தீர்ப்பு தீர்ப்பாகதான் உள்ளது. தமிழர்களின் உரிமை  பாதிக்கப்படவில்லை. இந்த அரசு காவிரி மேலாண்மை பெற்றே தீரும் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பிரதமர் சந்திக்க மறுத்தார் எனக் கூறுவது தவறு. அந்தத்துறை அமைச்சரான நிதின்கட்கரியை  சந்தித்த பிறகு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டதே, திரித்து தவறாக கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக கூறி உள்ளார்.  தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை  பிரேமலதா விஜயகாந்த்  விமர்சித்து வருவது இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஏக்கத்தில் அவர் பேசியதை காட்டுகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!