வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:25 (10/04/2018)

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்..! - கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அசத்தல் முயற்சி

அரசு அலுவலர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த ஏதுவாக அவர்களுக்கு பல்வேறு போட்டிகளை வைத்து, பரிசுகளும் வழங்கி சிறப்பித்திருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம். 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 371 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்தார். 

இக்கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு கடந்த 7.4.2018 மற்றும் 8.4.2018 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கியதோடு, "இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உடலும், மனமும் செம்மைப்படும். அதனால், உங்களால் சிறப்பாக அர்சுபணிகளை ஆற்ற முடியும்" என்று கேட்டுக் கொண்டார்.