Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும்' - மாரியம்மன் கோயிலில் தீமிதித்த செந்தில்பாலாஜி!

மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் பக்கம் இருக்கும் அ.தி.மு.க கட்சியை, கொடியை, இரட்டைச் சிலை சின்னத்தைக் கைப்பற்றவும் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் வேண்டிக் கொண்டு தீமிதித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

செந்தில்பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி அதிரடியாக எதையாவது செய்பவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது அவர் விரைவில் விடுதலைப் பெற வேண்டி கரூர் பசுபதீஸ்பரர் கோயில் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான அகல் விளக்கில் அம்மா என்று அமைத்து பிரமாண்டம் காட்டினார். அந்த வரிசையில், உடனே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அ.தி.மு.க கட்சி டி.டி.வி.தினகரனுக்குக் கிடைக்கவும் வேண்டிக்கொண்டு கரூர் தளவாபாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களோடு பக்தர்களாகத் தீமிதித்து மனமுருக வேண்டிக்கொண்டிருக்கிறார். 

இதுபற்றி, அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், ``அண்ணன் எது பண்ணினாலும் வித்தியாசமாகத் தான் பண்ணுவார். எல்லோரும் காவிரி பிரச்னைக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம்ன்னு பண்றாங்க. எங்க அண்ணனும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சி தலைமை தஞ்சையில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல், வரும் 18 ம் தேதி கரூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து டி.டி.வி.தினகரனை அழைத்து வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார். அது ஒரு பக்கம் இருக்க, என்ன வேண்டுதல் வைத்து வேண்டிக்கொண்டாலும் அதை அப்படியே நிறைவேற்றித் தருபவள் தளவாபாளையம் மாரியம்மன். அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமையவும், அ.தி.மு.க கட்சி டி.டி.வி.தினகரனுக்குக் கிடைக்கவும் வேண்டிக்கொண்டு இப்படி மாரியம்மன் கோயிலில் தீமிதித்திருக்கிறார் அண்ணன். கண்டிப்பாக அவருடைய வேண்டுதல் அத்தனையும் நிறைவேறும்" என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement