இமாச்சலில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 குழந்தைகள் உயிரிழப்பு..!

இமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப்பிரதேசம் காங்காரா மாவட்டத்தில் நுர்பூர்-சம்பா நெடுஞ்சாலையில், தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து பள்ளிக் குழந்தைகள் உட்பட 45 பேருடன் சென்றுகொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளி பேருந்து விபத்து

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போலீஸார் வருவதற்கு முன்னரே உள்ளூர் மக்கள் மீட்புப் பணியைத் தொடங்கிவிட்டனர். தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் 27 பள்ளிக் குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. விபத்தில், 67 வயதான பேருந்து ஓட்டுநர் மதன் லால் மற்றும் இரு ஆசிரியர்களும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு பதன்கோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!