வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (10/04/2018)

கடைசி தொடர்பு:05:31 (10/04/2018)

`மாணவி வளர்மதிக்கு எதிராக சிறையில் இழைக்கப்படும் அநீதி' சி.பி.சி.எல் அமைப்பு குற்றச்சாட்டு!

திருச்சி பெண்கள் தனிச்சிறையில் போராட்டக்காரர்கள் வளர்மதி, குறிஞ்சிநாதன் ஆகியோர் கடுமையான விதிமீறல்களை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் கதிராமங்கலம் மக்களை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டு திருச்சி சிறையிலிருக்கும் கல்லூரி மாணவிகள் வளர்மதி,  குறிஞ்சிநாதன் ஆகியோரை சி.பி.சி.எல் அமைப்பினர்  இன்று சென்று சந்தித்தனர்.  கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

வளர்மதி

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதி மற்றும்  குறிஞ்சிநாதன்  ஆகியோர் கூறியது பற்றி சி.பி.சி.எல். அமைப்பினர் நம்மிடம் தெரிவிக்கும்போது,  "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அத்தியாவசியமாக தேவைப்படும் "நாப்கின்" போன்றவற்றை தரமறுத்து "இருப்பு இல்லை" என்றுகூறி பொறுப்பற்ற முறையில் சிறை நிர்வாகம் நடந்துகொள்கிறது.

கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தற்பொழுதும் தொடர்கிறது. எங்களை நிர்வாண சோதனைக்கு தயாராகக் கூறியவுடன் கடுமையாக போராடி தற்காலிக வெற்றி கண்டுள்ளோம்.

சிறையில் இருக்கும் தொலைபேசியை எங்களைப் போன்ற விசாரணை சிறைவாசிகள் பயன்படுத்த அனுமதி மறுக்கின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய போவதில்லை என்றும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான  போராட்டம் தொடர வேண்டும் என்று கூறினார்கள் " என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க