வெளியிடப்பட்ட நேரம்: 02:19 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:30 (10/04/2018)

மும்பை நிழல் உலக குற்றவாளிகளைப் பிடிக்கும் நாகர்ஜுனா - 'ஆஃபிஸர்' டீசர் வெளியீடு!

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் ஆஃபிஸர் பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்கு பேர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், டோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகர்ஜுனா நடிக்க உருவாகியுள்ள 'ஆஃபிஸர்' படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மும்பை அண்டர் கிரவுண்டு கேங்ஸ்டர் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிஸராக நாகர்ஜுனா வருகிறார். அவரின் வேலையை பிடிக்காத ஒரு மகளுடன் வசித்து வருகிறார் என டிஸரின் மூலம் தெரிகிறது. மைரா சரீன் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படம் மே 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகர்ஜுனா

1988-ல் தெலுங்கில் வெளியான 'சிவா' என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.