Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாங்காங்கில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியைக் கைது செய்ய சீனா ஒப்புதல்..!

இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரவ் மோடியைக் கைது செய்ய ஹாங்காங் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவருடன் மோசடியில் ஈடுபட்ட அவரது உறவினர்களை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்துள்ளது.

நீரவ் மோடி

மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, ஹாங்காங்கில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் பேசும்போது, `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நிரவ் மோடியைக் கைது செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று கூறினார். மார்ச் 23-ம் தேதி இந்தியாவின் சார்பில் ஹாங்காங் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கெனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக சீனாவிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது நிரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீன அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கை எடுக்கலாம் என்று சீனா கூறியுள்ளது. 

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறும்போது, `இரு நாட்டு ஒப்பந்தங்களின்படி, சட்ட விதிகளை பின்பற்றி, நிரவ் மோடியைக் கைது செய்ய, ஹாங்காங் உரிய நடவடிக்கை எடுக்கலாம்’ என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement